ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மழை முன்னெச்சரிக்கை.. மதுபான பெட்டிகளை பாதுகாப்பாக வைக்க தமிழக அரசு அறிவுறுத்தல்!

மழை முன்னெச்சரிக்கை.. மதுபான பெட்டிகளை பாதுகாப்பாக வைக்க தமிழக அரசு அறிவுறுத்தல்!

மாதிரி படம்

மாதிரி படம்

டாஸ்மாக் கடைகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கையை தமிழ்நாடு மாநில வாணிப கழகம் அனுப்பியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுபான பெட்டிகளை பாதுகாப்பாக வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அனைத்து துறைகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள துறை சார்ந்த அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், டாஸ்மாக் கடைகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கையை தமிழ்நாடு மாநில வாணிப கழகம் அனுப்பியுள்ளது.

  அதில், மதுபான கிடங்குகளில் உள்ள சரக்குகள், பதிவேடுகள், கோப்புகளுக்கு எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினால் எந்தவித சேதாரமும் ஏற்படாத வண்ணம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு பாதுகாப்பான முறையில் வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மேலும் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள மதுபான சில்லரை விற்பனை கடைகளில் இருப்பில் உள்ள மதுபான பெட்டிகள், பதிவேடுகள் மற்றும் கோப்புகள் மழை மற்றும் வெள்ளநீரால் பாதிக்கப்படாதவாறு தரையில் இருந்து உயர்த்தப்பட்டு பாதுகாப்பான முறையில் விற்பனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Tamil Nadu, Tasmac