தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடவும், மாணவர்களை வேறு பள்ளிக்கு நடப்பு கல்வியாண்டிலேயே மாற்றவும் தொடக்க கல்வித்துறை இயக்குனர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ள தொடக்கக் கல்வித்துறை இயக்குநர், அங்கீகாரம் பெறாத அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், மழலையர் பள்ளிகளின் விவரத்தை அனுப்பி வைக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அங்கீகாரம் பெறுவதற்கு முழுமையான வடிவில் கருத்துரு அளிக்க இயலாத பள்ளிகளை மூடவும், அங்கு பயிலும் மாணவர்களை நடப்பு கல்வி ஆண்டிலேயே வேறு பள்ளிக்கு மாற்றவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்பட்டால் வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும், முதன்மைக் கல்வி அலுவலர்களே பொறுப்பு என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 100க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள இதர விலையில்லா பொருட்களை பள்ளிகள் மூலம் விநியோகிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் இலவச விலையில்லா பொருட்களை மாணவர்களுக்கு எப்போது வினியோகம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் பழனிச்சாமி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளார்.
Must Read : ரேஷன் கடையில் இரண்டாவது தவணையாக ரூ.2000 வழங்கும் தேதி அறிவிப்பு
கொரோனா சூழலில் விலையில்லா பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வீடுகளிலேயே சென்று வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வருகை புரிந்து பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட இலவச பொருட்களை பெற்றுக் கொள்ளவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: School, School books, School education