திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதி 2,000 ரூபாய் வழங்க அரசாணை வெளியீடு

தலைமைச் செயலகம்

திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி தொகை 2 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் மே 7-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற உடனே, கொரோனா பாதிப்பு நிவாரணநிதியாக அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா 4,000 ரூபாய் வழங்கப்படும். மே மாதத்தில் 2,000 ரூபாயும், ஜூன் மாதத்தில் 2,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மே மாதத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா 2,000 ரூபாய் வழங்கப்பட்டது.

  இந்தநிலையில், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் விடுபட்ட திருநங்கைகளுக்கும் நிதி உதவி வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

  இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவி தொகையாக 4,000 ரூபாய் வழங்க முடிவு செய்து முதல் தவணையாக 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் குடும்ப அட்டை வைத்திருந்த 2,956 திருநங்கைகளுக்கும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து ஏற்கனவே குடும்ப அட்டை உள்ள திருநங்கைகள் 2,956 பேருக்கு நிதி வழங்கியது போக எஞ்சிய 8,493 திருநங்கைகளுக்கும் நிதி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 8,493 திருநங்கைகளுக்கு தலா 2000 ரூபாய் வழங்க 1,69,86,000 ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: