சனிக்கிழமைகளிலும் இறைச்சி கடைகளை அடைக்க தமிழக அரசு உத்தரவு

சனிக்கிழமைகளிலும் இறைச்சி கடைகளை அடைக்க தமிழக அரசு உத்தரவு

மாதிரிப் படம்

தமிழகத்தில் சனிக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளை அடைக்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை, சுனாமி போல மிகப்பெரிய தாக்குதலை தொடுத்துள்ளது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.50 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு 15,000-த்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுவருகின்றன. கடந்தவாரம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளது. மருத்தகங்களைத் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

  ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக்கடைகள் அடைக்கப்படும் என்பதால் தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளிலேயே இறைச்சிக் கடைகளில் கூட்டம் கூடியது. இந்தநிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் சனிக்கிழமைகளிலும் இறைச்சிக் கடைகள் மூடவேண்டும். சனிக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளில் கூட்டம் கூடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உத்தரவை மீறி கடைகளில் திறந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: