நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதேபோல வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளான 19 ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர் எவருக்கும் சம்பள பிடித்தம் கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்களுடைய வாக்கை பதிவு செய்ய ஏதுவாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும், வாக்குப்பதிவு நாளன்று வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வாக்காளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், அந்த விடுப்பிற்கு சம்பள பிடித்தமோ, சம்பள குறைப்போ இருக்க கூடாது எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.. ஏன் தெரியுமா? - எடப்பாடி பழனிசாமி
இந்த உத்தரவுகளை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.