ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு எதிர்ப்பு.. காரணத்தை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

 • Share this:
  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

  இது தொடர்பாக, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பு தெரிவித்த நிலையில் இந்த இடைக்கால மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடைபெற்றதது.

  அப்போது தமிழக அரசு சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த காரணத்தை ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மக்களின் உயிர் ஆபத்தில் இருக்கும் போது ஏன் ஆலையை திறக்க கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உரிய பதிலை தமிழக அரசு அளிக்க வேண்டுமென்று விசாரணையை திங்கட் கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
  Published by:Vijay R
  First published: