தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப்பணிகளில் 69 சதவீதம் இடஒதுக்கீட்டினை தொடர்ந்து செயல்படுத்திடவும், பேணி காத்திடவும் அரசு உறுதிபூண்டுள்ளது. மத்திய அரசின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) இட ஒதுக்கீடு வழங்கும் போது வளமான ( Creamy Layer) நீக்கம் செய்யும் கொள்கையை தமிழக அரசு எதிர்ப்பதாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கொள்ளை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பண்டித நேரும், அண்ணல் அப்பேத்காரும் வலியுறுத்தி வந்தவாறு பொருளாதார நிலை அளவுக்கோலாகக் கருதாமல் சமூக நிலையை மட்டும் கருதி பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் ஒன்றிய அரசின் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் வழிவகுக்கும் வகையில் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை தமிழ்நாடு வலியுறுத்தும்.
அரசு துறைகளில் வழங்கும் இட ஒதுக்கீட்டை போல தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தும். ஒன்றிய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 27 விழுக்காடு இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தபடுவதில்லை என்று தெரிய வருவதாகவும், ஐஐடி (IIT), எய்ம்ஸ் (AIIMS), ஐஐஎம் (IIM) ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முழுமையாக முறைப்படுத்த தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியறுத்தும்.
மேலும், வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 2,814 வக்ஃபு நிறுவனங்கள் தற்போது தமிழ்நாட்டில் உள்ளதாகவும், இதில் பதிவு செய்யப்பட்ட வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க மதிப்பீட்டில் 50 விழுக்காடு அல்லது 25 ஆயிரம் ரூபாய் இவற்றில் எது குறைவோ அதனை மானியமாக வழங்க உத்தரது. இந்தத் திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படும் என்றும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கொள்ளை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் தீர்மானம்
அத்துடன், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு விடுதிகளிலும் கூடுதலாக ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் இடையூறின்றி கல்வியைத் தொடர 1,336 விடுதிகள் இயங்கி வருகின்றன. கல்லுாரி விடுதிகளின் தரத்தினை உயர்த்த 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கொள்ளை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MK Stalin, Reservation, TN Assembly