மத்திய அரசின் புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை: தமிழக அரசு எதிர்ப்பு

மாதிரிப் படம்

EIA | மத்திய அரசின் புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 • Share this:
  2006 சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையில் பல்வேறு திருத்தங்கள் செய்த மத்திய அரசு அதன் வரைவு அறிவிக்கையை கடந்த மார்ச் மாதம் பொதுமக்கள் கருத்திற்காக வெளியிட்டது. சுற்றுச்சூழல் திருத்தங்களுக்கு காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள், சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் மத்திய அரசுக்கு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் எழுதிய கடிதத்தை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நியூஸ் 18 தமிழ்நாடு பெற்றுள்ளது.

  பெரியசோரகை பெருமாள் திருக்கோயில் திருக்குடமுழுக்கு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்..

  அதில், மத்திய அரசின் புதிய சுற்றுச்சூழல் அறிவிக்கையானது மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு வல்லூநர் குழுவை வலுவிழக்கச் செய்யும் வகையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. B2 என வகைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கான அனுமதியை மாநில சுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பீட்டுக்குழு பரிசீலிக்காமல் அனுமதி வழங்கலாம் என்ற திருத்தத்தையும், சுரங்கத் திட்டங்களின் ஆயுட்காலத்தை 30 ஆண்டுகளுக்கு பதிலாக 50 ஆண்டுகளாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க...EIA | சுற்றுச்சூழல் அனுமதியை வேகமாக வழங்குவதற்கு புதிய வழிகாட்டுதல்கள்.. மத்திய அரசு வெளியீடு..  மேலும் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு முன்பாக தொழிற்சாலை அமையவுள்ள இடத்தில் சுற்றுச்சுவர் கட்ட அனுமதிக்கக்கூடாது எனவும், அதே நேரத்தில் வேலி அமைக்க அனுமதிக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: