Home /News /tamil-nadu /

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உறுப்பு தானங்கள் பெற அனுமதிக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உறுப்பு தானங்கள் பெற அனுமதிக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்ரமணியன்

அமைச்சர் மா.சுப்ரமணியன்

இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் கலந்து கொண்ட தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தனது கண்களை தானம் செய்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் உடல் உறுப்பு தானம் பெற அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் ரோட்டரி ராஜன் கண் வங்கி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் தி.நகர் இணைந்து நடத்திய கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தனது கண்களை தானம் செய்து பேரணியை துவங்கி வைத்தார்.

     



    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உடல் உறுப்பு தானம் பெற அனுமதி வழங்கப்படும் என்றார். இனி, மூளை சாவு அடைபவர்களிடம் இருந்து அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் உடல் உறுப்பு தானம் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.

    இதையும் வாசிக்க:  ஜிஎஸ்டி முறையால் மாநிலங்களுக்கு நிதிச் சுமை- தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    தமிழகத்தில் உடல் உறுப்பை வேண்டி காத்திருப்போரின் பட்டியல் பூஜ்ஜியம் என்ற நிலை வரும் வரையில் இந்த முயற்சிகள் தொடரும் என்றும் அமைச்சர் கூறினார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Organ donation

    அடுத்த செய்தி