Home /News /tamil-nadu /

யானைகள் வழித்தடத்தில் உள்ள சட்டவிரோத செங்கற் சூளைகளை அகற்ற உத்தரவிடப்படும் - தமிழக அரசு

யானைகள் வழித்தடத்தில் உள்ள சட்டவிரோத செங்கற் சூளைகளை அகற்ற உத்தரவிடப்படும் - தமிழக அரசு

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கோவையில் யானைகள் வழித்தடத்தில் உள்ள செங்கற்சூளைகள் மூட உத்தரவிடப்படும் என தெரிவித்தார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கற் சூளைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடமான தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த 134 செங்கற்சூளைகள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டன. இந்த செங்கற்சூளைகள் ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட யானைகள் வழித்தடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அரசின் அனுமதியின்றி செயல்படும் இந்த செங்கற்சூளைகளை  மூட உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம் போன்ற யானைகள் வழித்தடத்தில் செயல்படும் செங்கற்சூளைகள் அரசு அனுமதி பெற்று செயல்படுகின்றனவா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், செங்கற்சூளைகள் மூடப்பட்ட தடாகம் பகுதிகளில் மண் எடுத்ததால் ஏற்பட்ட குழிகளை மூடவும் உத்தரவிட்டது.

மேலும் படிக்க : காய்ச்சல் அதிகரிப்பு; 1 முதல் 8 வரையிலான வகுப்புகளை மூட பரிந்துரை - புதுச்சேரி சுகாதார துறை

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கோவையில் யானைகள் வழித்தடத்தில் உள்ள செங்கற்சூளைகள் மூட உத்தரவிடப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 17ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Published by:Raj Kumar
First published:

Tags: Chennai High court, Elephant routes, Tamil Nadu government

அடுத்த செய்தி