ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ் நாடு அரசு

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ் நாடு அரசு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Jallikattu 2023 | ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது, காளைகளுடன் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளின்போது, காளைகளுடன் அதன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாடுபிடி வீரர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழும், போட்டி நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.
போட்டியில் அதிகபட்சமாக 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்
பார்வையாளர்களின் எண்ணிக்கை 150 பேர் அல்லது மொத்த இருக்கையில் பாதியளவு மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே மாவட்ட நிர்வாகத்தால் அடையாள அட்டை வழங்கப்படும்.
அடையாள அட்டை இல்லாதவர்கள் அரங்கத்திற்குள் நுழைய அனுமதியில்லை.
காளைகள் அவிழ்த்து விடப்படும் நேரத்தில் இருந்து அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் உடனடியாக அரங்கில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published:

Tags: Jallikattu