• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோயில்களில் தமிழில் அர்ச்சனை : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு

கோயில்களில் தமிழில் அர்ச்சனை : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு

தமிழில் அர்ச்சனை

தமிழில் அர்ச்சனை

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தமிழக அரசின் கருத்தையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு கேவியட் மனு.

  • Share this:
    கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை விதிக்க கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து எவரேனும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தமிழக அரசின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கும், தமிழில் அர்ச்சனை செய்வதற்கும் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது. எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது மக்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது.

    இதனிடையே உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து எவரேனும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தமிழக அரசின் கருத்தையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை கடந்த 9ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம், 2008ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது எனவும், தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதாகவும், குறிப்பிட்ட மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    Must Read : நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கான தடை தொடரும் - சென்னை உயர்நீதிமன்றம்

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும்பட்சத்தில் தமிழக அரசின் கருத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்து தமிழக அரசின் வழக்கறிஞர் டி.குமணன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை நேற்று தாக்கல் செய்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: