27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க தமிழக அரசு முடிவு - தகவல்

தமிழகத்தின் மற்ற 27 மாவட்டங்களில் டாஸ்டாக், சலூன், பூங்கா உள்ளிட்டவை திறக்கப்பட்டன.

 • Share this:
  கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

  கொரோனா தொற்று 2-வது அலை தமிழகத்தில் அதிகரித்து வந்ததை அடுத்து தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருவதால் கடந்த ஜூன் 11-ம் தேதி ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது.

  ஆனால் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அங்கு குறிப்பிட்ட சிலவற்றிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  Also Read : மிரட்டல் வழக்கில் ஜாமின் பெற்ற சாட்டை துரைமுருகன் மற்றொரு வழக்கில் கைது

  தமிழகத்தின் மற்ற 27 மாவட்டங்களில் டாஸ்டாக், சலூன், பூங்கா உள்ளிட்டவை திறக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ள இந்த மாவட்டங்களில் மாநகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 50 சதவீதம் சதவீதம் பேருந்துகளை மட்டுமே இயக்கப்பட உள்ளதால் போக்குவரத்து கழகங்கள் ஆயுத்தமாகி வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: