Home /News /tamil-nadu /

“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கம் - மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கம் - மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

மீண்டும் மஞ்சப்பை

மீண்டும் மஞ்சப்பை

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த "மீண்டும் மஞ்சப்பை" (Manjapai campaign) உத்தியை அரசு கையில் எடுத்திருக்கிறது. பிளாஸ்டிக் பொருள்களுக்கு குட்பை சொல்லும்விதமாகவும் துணிப்பைகளுக்கு மீண்டும் திரும்பும் வகையிலும் மக்கள் இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  தமிழக அரசின் “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கம் நிகழ்ச்சி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்பட கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள “கலைவானர் அரங்கத்தில்” இன்று வைக்கப்பட உள்ளது. இந்த கண்காட்சியை இன்று மாலை 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

  பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று பொருளை பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக "மீண்டும் மஞ்சப்பை" இயக்கத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில், திருமண நிகழ்வுகளில் தேங்காய், பழம் ஆகியவற்றை மஞ்சள் பையில்தான் போட்டுக் கொடுப்பார்கள், அது வீடுகளை அடைந்ததும், கடைகளுக்குச் செல்வதற்கும் இதர பணிகளுக்கும் பயன்படுவது வாடிக்கை. சந்தைகளிலும், பெரும் பணப்பரிமாற்றங்களிலும் கூட மஞ்சள் பைகள்தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. திருமண தாம்பூலப் பை உள்பட எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் எல்லா இடங்களிலும் மஞ்சள் பை நீக்கமர நிறைந்திருந்தது.

  பாலிதீன் பைகள் அறிமுகமாகாத காலத்தில் அரிசியோ, பருப்போ, காகிதமோ, பணமோ ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச்செல்ல உதவியது மஞ்சப்பைகள்தாம், காலப்போக்கில் பாலிதீன பைகளின் புழக்கம் அதிகரித்தது. அதன்பிறகு மஞ்சப்பை என கேலிப்பொருளாக சிறுமைப்படுத்தப்பட்டு துணிப்பைகள் ஒதுக்கி வைக்கப்பட்டன.

  குறைந்த செலவு என வணிக நிறுவனங்களும், கையாளுவதில் எளிமை என மக்களும் பிளாஸ்டிக்கிற்கு ஏகோபித்த ஆதரவு தர, ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக், கேடு வேலையை ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

  மண், நீர், காற்று, தாவரம், விலங்கு, மனிதன் என எதனையும் விட்டு வைக்காமல், முடிந்த அளவு தீமை தந்து வருகிறது பிளாஸ்டிக். எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டுமென சூழலியல் ஆர்வர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் சூழலில் அதற்கான முயற்சிகள் உலகம் முழுவதும் எடுக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, 2019-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டது. அதிகாரிகள் அவ்வப்போது, ஆங்காங்கே சோதனை நடத்தினாலும்கூட, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், தடையின்றி வெளியே வலம் வந்தபடிய உள்ளன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் குறித்து தகவல் தந்தால் சன்மானம் அளிக்கப்படும் என்றுகூட அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.

  Must Read : பொங்கல் தொகுப்பு- பொருட்கள் இல்லை என மக்களை திருப்பி அனுப்பக் கூடாது: தமிழக அரசு

  இந்நிலையில்  மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த "மீண்டும் மஞ்சப்பை" உத்தியை அரசு கையில் எடுத்திருக்கிறது. பிளாஸ்டிக் பொருள்களுக்கு குட்பை சொல்லும்விதமாகவும் துணிப்பைகளுக்கு மீண்டும் திரும்பும் வகையிலும் மக்கள் இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

  Read More : ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் உறுதி....! ₹1000 அல்லது ₹2000 வழங்க வாய்ப்பு

  சுற்றுச்சுழலுக்கு உகந்த மஞ்சப்பை இயக்கத்துக்கு ஏகோபித்த ஆதரவை அளிப்பதே எதிர்கால தலைமுறைக்கு நாம் செய்யும் பேருதவியாகும்.
  Published by:Suresh V
  First published:

  Tags: MK Stalin, TN Govt

  அடுத்த செய்தி