ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் 2017 ம் ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் 3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என்று 154 பேரிடம் ஆணையம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், மருத்துவ குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று அப்போலோ நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து 21 டாக்டர்கள் அடங்கிய நிபுணர் குழு மூலம் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக 90 சதவீதம் ஆணையம் விசாரணை முடித்துள்ளதால் அப்போலோ கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக அப்போலோ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்
ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து விசாரணைக்கும் கடந்த 2019 ஏப்ரல் 26-ந்தேதி இடைக்கால தடை விதித்தது. இந்த தடை உத்தரவை ரத்து செய்யவும், வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரியும் தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், 10 வது முறையாக கொடுக்கப்பட்ட 6 மாதம் கால அவகாசம் ஜூலை 24 ம் தேதியோடு முடிவடைகிறது. எனவே காலநீட்டிப்பு செய்ய ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியதை தொடர்ந்து 6 மாதங்கள் காலநீட்டிப்பு செய்து தமிழக உத்தரவிட்டுள்ளது.
ஆணைத்தில் இறுதியாக, கடந்த 2019 ஜனவரி 22 ம் தேதி தம்பிதுரையிடம் நேரடியாக விசாரணை நடைபெற்றது. இதன் பின்பு விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதித்ததால், கடந்த 26 மாதங்களாக விசாரணை நடைபெறாமலே தமிழக அரசு காலநீட்டிப்பு செய்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரிய தமிழ்நாடு அரசின் இடையீட்டு மனு வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.