Home /News /tamil-nadu /

சிட்லபாக்கம் ஏரியிலுள்ள பள்ளிக் கட்டடம் மட்டுமே இடிக்கப்படவில்லை - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

சிட்லபாக்கம் ஏரியிலுள்ள பள்ளிக் கட்டடம் மட்டுமே இடிக்கப்படவில்லை - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

சிட்லபாக்கம் ஏரி குறித்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    சிட்லபாக்கம் ஏரியில் பள்ளிக் கட்டடத்தை தவிர பிற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, பள்ளிக் கட்டிடத்தை இடம்மாற்றும் செய்வதற்கு கல்வியாண்டு முடியும் வரை அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஏரியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு தரப்பில், சிட்லப்பாக்கம் ஏரியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் தவிர, பிற அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு விட்டதாகவும், பள்ளியை வேறு கட்டிடத்துக்கு மாற்றவும், பள்ளி கட்டிடத்தை அகற்றவும் கல்வியாண்டு முடியும் வரை அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

    இதை ஏற்றுக் கொண்டு, பள்ளியை கல்வியாண்டு முடிந்ததும் வேறு கட்டிடத்துக்கு மாற்றும்படியும், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தை அகற்றவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Chennai High court

    அடுத்த செய்தி