முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துக - அரசு ஊழியர் ஒன்றியம் சார்பில் போராட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துக - அரசு ஊழியர் ஒன்றியம் சார்பில் போராட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம்

அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி மத்திய அரசு அறிவித்த அதே நாளில் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் ஒன்றியம் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை, 19 மாதங்களாக நிறைவேற்றவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி அமைச்சர் தடையாக இருப்பதாகக் கூறி முழக்கங்களையும் எழுப்பினர்.

தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேலத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சேலம், நாமக்கல் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் இதில் பங்கேற்றனர். அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி மத்திய அரசு அறிவித்த அதே நாளில் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தினர்.

First published:

Tags: Pension Plan, Tamil Nadu