முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழக பொதுத் துறை கணினியில் சைபர் அட்டாக்: முக்கிய ஆவணங்கள் முடக்கம் - கிரிப்டோகரன்சி கேட்டு ஹேக்கர்கள் மிரட்டல்

தமிழக பொதுத் துறை கணினியில் சைபர் அட்டாக்: முக்கிய ஆவணங்கள் முடக்கம் - கிரிப்டோகரன்சி கேட்டு ஹேக்கர்கள் மிரட்டல்

சைபர் க்ரைம்

சைபர் க்ரைம்

தமிழக அரசின் பொதுத்துறை கணினியில் சைபர் அட்டாக் நடைபெற்றுள்ளது. மேலும் கிரிப்டோகரன்சி கேட்டு ஹேக்கர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

  • Last Updated :

உலகம் முழுவதுமே தற்போது இணையத்தில் இணைந்துள்ளது. உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் இணையம் என்ற ஒன்றின் மூலம் இணைந்தே உள்ளனர். உலகம் நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தில் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறதோ அதே வேகத்தின் அதன் ஆபத்துகளும் வளர்ந்துவருகின்றன. இந்த இணைய உலகில் பல பெரிய புள்ளிகளையும் அச்சுறுத்துவது ஹேக்கிங்தான்.

கடந்த ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில்கேட்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்கள் சமீபத்தில் ஹேக்கர்களால் முடக்கப்பட்டன. அதேபோல பல்வேறு தருணங்களில் பல நாடுகளின் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், தமிழக அரசு துறையின் சில முக்கிய ஆவணங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சைபர் தாக்குதலால் அரசின் சில முக்கிய கோப்புகள் முக்கிய பிரமுகர்கள் வருகைகள் சார்ந்த திட்டங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் என்க்ரிப்டட் குறியீட்டை ஒப்படைப்பதற்காக 1950 மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை கிரிப்டோகரன்சி வழியில் செலுத்த வேண்டும் ஹேக்கர்கள் மிரட்டல் விடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே கணினி மேம்பாட்டு மையம் மற்றும் கணினி பிரச்சினைகளை விரைந்து சரி செய்ய அமைக்கப்பட்ட மத்திய மாநில அரசுகளின் குழுக்கள் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் இந்த என்க்ரிப்ட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

டெஸ்க்டாப் கணினிகளை ஆய்வு செய்த தமிழக காவல்துறையின் சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இதனால் எந்த பாதிப்பு இல்லை என கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் பொது துறையில் நடைபெற்ற இந்த சைபர் அட்டாக் குறித்து விரைவில் முறையான புகார் அளிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

First published:

Tags: Cyber attack