கரு.நாகராஜனின் வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

சென்னை உயர் நீதிமன்றம்

ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

 • Share this:
  நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு ஜனநாயத்தை ஒடுக்கும் முயற்சி என்று தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  நீட் தேர்வு பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் மாணவர் அல்லது பெற்றோர் என்ற முறையில் இல்லாமல் விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி. நீட் தேர்வின் தாக்கம் குறித்து குறைகளை கேட்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பிறகுதான் அரசால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே அரசின் அதிகாரத்திலும், அரசியல் சாசன அடிப்படை பணிகளிலும் குறுக்கிடும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வழக்கின் மேல் விசாரணை வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது.

  இதனிடையே நீட் பாதிப்பு ஆய்வுக்குழுவுக்கு எதிரான பா.ஜ.க வழக்கில் தி.மு.க கூட்டணி கட்சிகள் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளன. நீட் தேர்வு பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழ் நாடு பா.ஜ.க பொது செயலாளர் கரு. நாகராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி தி.மு.க, ம.தி.மு.க, இ.கம்யூ, தி.க உள்ளிட்ட கட்சிகள் மற்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
  Published by:Karthick S
  First published: