இசைக் கலைஞர்களுக்கு மும்மடங்கு ஊதிய உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு

இசைக் கலைஞர்களுக்கு மும்மடங்கு ஊதிய உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு

தவில்

திருக்கோவில்களில் பணிபுரியும் இசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியத் தொகை உயர்வு

 • Share this:
  ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் பாடல் பெற்ற திருக்கோவில்களில் பணிபுரியும் நாதஸ்வரம், தவில் மற்றும் தாளம் போன்ற இசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியத் தொகையை மும்மடங்காக உயரத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

  அதன்படி, நாதஸ்வர கலைஞர்களுக்கு மாத ஊதியம் ரூ.1500லிருந்து ரூ.4500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தவில் இசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியம் ரூ.1000 லிருந்து ரு.3000 ஆக உயர்த்தியுள்ளது தமிழக அரசு.

  மேலும், தாளம் இசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியம் ரூ.750 லிருந்து ரூ.2250 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் இசை கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
  Published by:Suresh V
  First published: