முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறையை வெளியிட்ட தமிழக அரசு

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறையை வெளியிட்ட தமிழக அரசு

கோப்புப் படம்

கோப்புப் படம்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. இருப்பினும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்தநிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடும் வழிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 12-ம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களை கீழ்க்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

  • 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி 12-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 50 சதவீதமாக கணக்கிடப்படும்.
  • 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 20 சவீதமாக கணக்கிடப்படும்.
  • 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 30 சதவீதமாக கணக்கிடப்படும்.
  • 12-ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
  • செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
  • கொரோனா உள்ளிட்ட ஏதேனும் காரணங்களால் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
  • 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.
  • கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலோ, அம்மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்திக் கொண்டு 35 சதவீத மதிப்பெண் வழங்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: 12th exam, Tamil Nadu govt