அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

பள்ளி மாணவிகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பதைத் தொடர்ந்து 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பரவல் தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியவுடன் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மூடப்பட்ட பள்ளி, இந்த ஆண்டு ஜனவரியில்தான் திறக்கப்பட்டது. ஜனவரி மாதம் 19-ம் தேதி 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 8-ம் தேதி 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி திறக்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இரண்டாம் அலை இந்தியாவில் தொடங்கிவிட்டது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

  இந்தநிலையில், தஞ்சாவூரில் 11 பள்ளிகளில் 98 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அதேபோல, திருச்சியிலும் பள்ளியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தநிலையில், 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும்வரை விடுமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம்போல நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  தமிழ்நாடு மாநில வாரியம் தவிர மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அத்தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்டுள்ளபடி நடைபெறும். இப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அவர்களுக்கான விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: