தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: 3 லட்சம் பேர் பயனடைவர்

மாதிரிப் படம்

தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

 • Share this:
  தீபாவளி பண்டிகை நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. மத்திய அரசு ஏற்கெனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. இந்தநிலையில், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை (Deepavali Bonus) தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போனஸ் வழங்க ரூ. 210 கோடி 48 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழத்தில் உள்ள C மற்றும் D பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும்.

  சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% போனசாக கிடைக்கும். முதலில் போக்குவரத்து, மின்சாரம் என மாநில பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரிய ஊழியர்களுக்கு 8.33% போனஸ்+11.67% கருணைத் தொகை என 20% தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று நோயின் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சரிவு மற்றும் நிதிச்சுமை கருத்தில் கொண்டு 10% சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு (TN Govt) அறிவித்துள்ளது.

  அதேபோல நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  Published by:Karthick S
  First published: