கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் கடை.| மாதிரிப்படம்.

கருணாநிதி பிறந்தநாளன்று அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கோதுமை, உப்பு, ரவை உள்ளிட்ட 13 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் வழங்கிய தொகுப்பு கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 30,000-த்தைக் கடந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 300 பேர் வரை உயிரிழந்துவருகின்றனர். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மளிகைக் கடைகள், பால்கடை, இறைச்சிக் கடைகளைத் தவிர்த்து பிற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

  பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மே மாதம் 2,000 ரூபாயும், ஜூன் மாதம் 2,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்தநிலையில், தி.மு.க முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதியன்று 2,11,12,798 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் கோதுமை, ரவை, சீனி, பருப்பு உள்ளிட்ட 13 பொருள்கள் அடங்கிய தொகுப்பு கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: