நவம்பர் 16-ம் தேதி முதல் 9, 10, 11,12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் - தமிழக அரசு

பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்புகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களை வரும் 16-ம் தேதி முதல் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நவம்பர் 16-ம் தேதி முதல் 9, 10, 11,12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் - தமிழக அரசு
கோப்பு படம்
  • Share this:
இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய நிலையில், மார்ச் 25-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

சுமார் ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு தமிழகத்தில் அனுமதியளிக்கப்படவில்லை. இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு தொடர்பாக தமிழக அரசு பிற்ப்பித்துள்ள உத்தரவு இன்று முடிவடைகிறது. அதனையடுத்து, நேற்று தமிழ்நாட்டில் அடுத்த கட்ட பொது முடக்கம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில், நவம்பர் 31-ம் தேதி வரையிலான புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.  அதன்படி, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் திறக்கப்படும். பள்ளி, கல்லூரி, பணியாளர்கள் விடுதிகள் உள்பட அனைத்துவிடுதிகளும் 16-ம் தேதி முதல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


உரிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படவேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்


First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading