• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் மதுக்கூடங்கள் திறக்க அனுமதி

தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் மதுக்கூடங்கள் திறக்க அனுமதி

மதுபானம்

மதுபானம்

தமிழ்நாட்டில் தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளிலுள்ள மதுக்கூடங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தது. தமிழகத்தில் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமானது. இதனையடுத்து கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்றாவது அலை வர வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசும், கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்துவருகிறது. இந்தநிலையில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அதன்படி,

    • கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    • உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

    • இதுவரை இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் 23-ம் தேதியிலிருந்து இரவு 10 மணிவரை நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

    • தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

    • ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும்.

    • செம்படம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். மேற்படி உயர்வகுப்புகள் செயல்படுவதைக் கவனித்து அதன் அடிப்படையில் மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.

    • அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகள், தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

    • அனைத்து பட்டயப்படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.

    • தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளிலுள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: