Home /News /tamil-nadu /

ஊரடங்கு நாளன்று திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு அனுமதி - அரசு அறிவிப்பு

ஊரடங்கு நாளன்று திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு அனுமதி - அரசு அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Sunday lockdown | ஊரடங்கு நாளன்று திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை நோக்கி நகர்ந்துவருகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் சுமார் 9,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. அதன் ஒருபகுதியாக நேற்று முதல் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இரவு 10 மணி முதல் 5 மணிவரை அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்தகங்கள், உணவகங்கள், பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கபடுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்தநிலையில், முழு ஊரடங்கு நாளான்று நடைபெறும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு அனுமதி உண்டா என்று பொதுமக்களிடம் கேள்வி எழுந்தது.

    ஊரடங்கு பொழுதுகளில் மக்களிடம் இப்படிதான் நடந்துகொள்ளவேண்டும்- காவல்துறையினருக்கு சைலேந்திர பாபு உத்தரவு



     இதுதொடர்பாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ‘​கொரோனா பரவலை தடுப்பதற்காக, அரசு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் ஏற்கனவே திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு. நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் திருமண அழைப்பு பத்திரிக்கைகளை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

    ​திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ​முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல் துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Lockdown, Marriage

    அடுத்த செய்தி