கொரோனாவால் உயிரிழந்த மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு

தலைமைச் செயலகம்

கொரோனாவால் உயிரிந்த மருத்துவப் பணியாளர்கள் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. கொரோனா பரவல் காரணமாக எண்ணற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றன. கொரோனா வைரஸ் பரவலால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுவருகிறனர். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்கள் கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதைக் கடந்து உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

  தமிழ்நாட்டில் இதுவரையில் 25,00,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக 34,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தநிலையில், கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உயிரிழந்த 34 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க ரூ.8.50 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: