தமிழ்நாடு அரசின் நிதி நிலைமையை விளக்கும் வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க முதலில் நிதிநிலை அறிக்கையை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தது. இதனையடுத்து தமிழகத்தில் விரைவில் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமையை விளக்கும்,வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தற்போது தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து பேசிய அமைச்சர், “இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட பலரும் தங்களின் உதவியை, கருத்தை பங்களிப்பை அளித்துள்ளனர். வெள்ளை அறிக்கையை வெளியிடும் முன் ஆந்திரா , பஞ்சாப், பொன்னையன் வெளியிட்ட அறிக்கை எல்லாம் ஆய்வு செய்துள்ளோம்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு வருமானம் மிகவும் சரிந்துவிட்டது.இந்தியாவில் எந்த பெரிய மாநிலமும் இந்த அளவிற்கு சரியவில்லை.
வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நான்தான் பொறுப்பு.தமிழக அரசு வெளிப்படைத்தன்மை உடன் செயல்படுவதால் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம். தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை 3.16% ஆக உள்ளது. 2006 -11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உபரி வருவாய் இருந்தது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையில் 2,63, 976 கடன் சுமை உள்ளது.கடந்த அரசு, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட கடன் வாங்கியுள்ளது. உதய் மின் திட்டத்தால் கடும் நஷ்டத்தை மின் துறை சிந்தித்தது.90% மின்சாரத்துறை மீதும், 5% போக்குவரத்து துறை மீதும் கடன் உத்திரவாதம் அதிமுக அரசால் அளிக்கப்பட்டது.
தமிழகத்தின் பொது துறை நிறுவனங்களான TANGEDCO மற்றும் போக்குவரத்து கழகங்கள் கடன் பெற 91 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்துள்ளது.கடந்த 15 ஆண்டுகளாக வாகன மோட்டார் வரி போன்று வரிகள் உயர்த்தப்படாமல் இருந்துள்ளது.இது மற்ற மாநிலங்களைவிட மிகவும் குறைவு, இது வரி வருவாயை வெகுவாக குறைந்துள்ளது." என்றார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.