ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மூன்று மொழித் திட்டம் என்பது எந்த அர்த்தமும் இல்லாதது- அமித்ஷா கருத்துக்கு அமைச்சர் பி.டி.ஆர் எதிர்ப்பு

மூன்று மொழித் திட்டம் என்பது எந்த அர்த்தமும் இல்லாதது- அமித்ஷா கருத்துக்கு அமைச்சர் பி.டி.ஆர் எதிர்ப்பு

பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

மூன்று மொழித் திட்டம் என்பது எந்த அர்த்தமும் இல்லாதது என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்.

பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை இந்தியில் சேர்த்தால் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படாது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல.

அமைச்சரவையின் 70 சதவீத செயல் திட்டங்கள் இந்தி மொழியில்தான் தயாரிக்கப்படுகிறது. 9-ம் வகுப்பு வரையில் இந்தி தொடர்பான அடிப்படை அறிவை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். இதேபோன்று இந்தி மொழிப் பயிற்சி, தேர்வுகளுக்கும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். 8 வடகிழக்கு மாநிலங்களில் இந்தி மொழியை பயிற்றுவிக்க 22 ஆயிரம் இந்தி ஆசிரியர்கள் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து 8 வடகிழக்கு மாநிலங்களில், 10-ம் வகுப்பு வரையிலும் இந்தி மொழியை கட்டாயமாக்க மாநில அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல, கர்நாடாக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த விவாகரம் குறித்து நியூஸ்18 பேட்டியளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘மூன்று மொழித் திட்டம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அது எந்த ஆதாரமும் இல்லாதது. எதற்கு எனக்கு மூன்று மொழித் திட்டம் தேவைப்படுகிறது. இது எந்த அர்த்தமும் இல்லாதது. அமித் ஷாவின் கூற்று எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதது. இந்தியாவில் 60 முதல் 70 சதவீத மக்களுக்கு இந்தி தாய்மொழி கிடையாது. இந்தியை கட்டாயப்படுத்துவது என்பது வெறும் திணிப்பு கிடையாது. இது பொருளாதார ரீதியில் பின்தள்ளும் ஒருசெயலாகும் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Amit Shah, Minister Palanivel Thiagarajan, Three Language formula