• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரூ.25,000 விலை போகும் சிப்பிப் பாறை நாய்களின் சிறப்புகள் என்ன?

ரூ.25,000 விலை போகும் சிப்பிப் பாறை நாய்களின் சிறப்புகள் என்ன?

சிப்பிப் பாறை நாய்கள்

சிப்பிப் பாறை நாய்கள்

நாட்டு நாய் என்று அழைக்கப்படும் அதிக மோப்ப சக்தி கொண்ட சிப்பிப்பாறை நாய் குறித்து தெரிந்துகொள்வோம்.

  • Share this:
    சிப்பிப்பாறை நாய் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாய் இனமாகும். மதுரை அருகே சிப்பிப்பாறை என்ற பகுதியில் அந்த பகுதி மன்னர்களால் இனப்பெருக்கம் செய்யப்பட்டவை என்பதால் சிப்பிப்பாறை என்று அந்த நாய்களுக்கு பெயர் வந்தது என்று கூறப்படுகிறது. இதில் கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் ஆகிய நான்கும் நம் தமிழகத்தின் இனமாகும். இந்த நான்கு நாய்களுமே அதிக மோப்ப சக்தி கொண்டது.

    சிப்பிப்பாறை முன் காலத்தில் முயல், மான், பன்றி வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டன. மோப்ப சக்தியிலேயே காட்டுக்குள் பதுங்கியிருக்கும் முயல், பன்றி உள்ளிட்ட உயிரினங்களை குறிவைத்து பிடிப்பது இதன் தனிச் சிறப்பு. சிப்பிப்பாறை நாய் பார்ப்பதற்கு அழுக்குவெள்ளை, சாம்பல், மங்கிய பழுப்பு நிறமாகவும் கால்கள் பிரவுன் நிறத்திலும் இருக்கும். நெஞ்சுப்பகுதி விரிந்தும், வயிற்றுப்பகுதி இறங்கியும், கால்கள் சற்று நீளமாகவும் இருக்கும். ஒரு நடுத்தர அளவு நாய், இவை 25 அங்குலம் அல்லது 63.5 செ.மீ தோள் உயரம் இருக்கும்.

    எவ்வளவு உணவு எடுத்துக் கொண்டாலும் பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக இருக்கும் இதன் உடல் அமைப்புதான் வேகமாக பாய்ந்து ஓடிச் செல்லவும், விலங்குளை விரட்டவும் உதவுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த மக்கள் சிப்பிப்பாறை நாய்களை வீட்டில் ஒருவராகவே எண்ணி வளர்த்து வருகிறார்கள் .ஒரு வீட்டில் ஒன்று அல்லது இரண்டு நாய்கள் வளர்க்கிறார்கள். இந்த நாய்கள் வீட்டில் வளர்ப்பதற்கான காரணம் எலி உள்ளிட்ட சிறிய உயிரினங்கள் வீட்டின் உள்ளே வராமல் பாதுகாத்துக் கொள்ளும். பாம்பு போன்ற கொடிய உயிரினங்களின் தென் பட்டாலே குறைத்து வீட்டில் இருப்பவர்களை உஷார் செய்து விடும். இதனாலேயே பெரும்பாலும் இதனை வீட்டில் வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    இந்த நாய்கள் வீட்டுக்காவலுக்கு மட்டுமின்றி பெரிய பண்ணைகள், தோட்டங்களில் காவலுக்காகவும், அத்துமீறி நுழையும் ஆடு, மாடுகள் போன்ற விலங்குகளை விரட்டுவதற்காகவும் வளர்க்கப்படுகிறது. சிப்பிப்பாறை நாய்கள். முயல்களைவிட வேகமாக ஓடக்கூடியவை சிப்பிப்பாறை நாய்கள். அதாவதுமணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.

    உலகின் அதிவேகமாக ஓடக்கூடிய நாய்களில் ஒன்று சிப்பிப்பாறை. மனிதர்களுடன் பாசத்துடன் பழகும் இந்த சிப்பிப்பாறை நாய்கள், தனது எஜமான் ஒரு குரல் கொடுத்தால் உடனே ஓடிவந்துவிடும். சிப்பிப்பாறை நாய்களின் உடல் முடிகள் குட்டையானவையாக பளபளப்பானவையாக உள்ளது. இதனால் இவை வெப்பத்தைத் தாங்க உதவியாக உள்ளன. இந்த வகை நாய் ரூ.12 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. சிப்பிப்பாறை வகை நாய் குட்டி ரூ. 8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மோப்ப சக்தி அதிகம் கொண்டது என்பதால் வெளிமாநிலத்தவர்கள் கூட தமிழகத்திற்கு வந்து இந்த நாயை வாங்கிச் செல்கின்றனர்.

    2020ம் ஆம் 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் ராஜபாளையத்தில் வளர்க்கப்படும் சிப்பிப்பாறை உள்ளிட்ட நாட்டு நாய் இனங்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதத்துடன் புகழாரம் சூட்டினார். இதனால் நாடு முழுவதும் செல்லப்பிராணி பிரியர்களின் கவனம் நாட்டு நாயை நோக்கி திரும்பிய நிலையில்
    தற்போது புலியை தேட சிப்பாறை நாய் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நாட்டு நாய் இனத்திற்கு கூடுதல் பெருமை சேர்த்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: