Home /News /tamil-nadu /

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது - முழு விவரம்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது - முழு விவரம்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது - முழு விவரம்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது - முழு விவரம்

அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும்‌ 100 யூனிட்‌ வரை விலையில்லா மின்சாரம்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌ மற்றும்‌ குடிசை இணைப்புகளுக்கும்‌ தொடர்ந்து இலவச மின்சாரம்‌ வழங்கப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 100 யூனிட் வரை கட்டணத்தில் மாற்றமில்லை, 200 யூனிட்க்கு மேல் பயன்படுத்துவோருக்கு கட்டணம் உயர்கிறது. நுகர்வோர்களே 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது என அமைச்சர்  செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்தியஅரசின்‌ மின்‌ அமைச்சகத்தின்‌ அறிவிக்கையின்‌ படி 10 சதவீதம்‌ வெளிநாட்டு நிலக்கரியை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால்‌, மின்சாரத்தின்‌ சராசரி விலை அதிகரித்து மின்‌ வழங்கல்‌ விலை மற்றும்‌ சராசரி வருவாய்த்‌தேவைக்கான இடைவெளி அதிகரித்துள்ளது. மேலும்‌, கடந்த 1/0 ஆண்டுகளாக தமிழ்நாடுமின்‌ மிகை மாநிலம்‌ என அறிவித்த போதிலும்‌, மூன்றில்‌ இரண்டு பங்கு மின்சாரம்‌ அதிக விலைக்கு கடந்த காலத்தில்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டது. எனவே, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகத்திற்கு மின்‌ கட்டணத்தை 8 வருட இடைவெளிக்குப்‌ பிறகு உயர்தீதுவதைத்‌ தவிர வேறு வழியில்லை.

    அதன்படி புதிய மின்‌கட்டணம் ‌- முக்கிய அம்சங்கள்‌

    தாழ்வழுத்த மின்‌ கட்டணம்‌

    1. தமிழ்நாட்டில்‌ உள்ள2.37 கோடி வீடு மற்றும்‌ குடிசை மின்‌ நுகர்வோரில்‌, ஒரு கோடிநுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்‌) மின்‌ கட்டண உயர்வு எதுவும்‌ இல்லை.

    2. அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும்‌ 100 யூனிட்‌ வரை விலையில்லா மின்சாரம்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌ மற்றும்‌ குடிசை இணைப்புகளுக்கும்‌ தொடர்ந்து இலவச மின்சாரம்‌ வழங்கப்படும்‌.

    3. வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல்‌ வாக்குறுதி எண்‌: 222-ன்‌ படி, நிலைக்கட்டணம்‌ இருமாதங்களுக்கு ரூ.20 முதல்‌ ரூ.50 வரை செலுத்துவதில்‌ இருந்துமுழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால்‌ 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள்‌
    பயன்‌ அடைவர்.

    4. தற்பொழுது குடிசை விவசாயம்‌, கைத்தறி, விசைத்தறி மற்றும்‌ வழிப்பாட்டுதலங்கள்‌ முதலிய மின்‌ கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும்‌ மின்சார மானியம்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌.

    5. இருமாதங்களுக்கு மொத்தம்‌ 200 யூனிட்‌ வரை பயன்படுத்தும்‌ 63.35 இலட்சம்‌ வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்‌) மாதம்‌ ஒன்றிற்கு ரூ.27.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    6. இரு மாதங்களுக்கு மொத்தம்‌ 900 யூனிட்டுகள்‌ வரை மின்‌ நுகர்வு செய்யும்‌ 36.25 இலட்சம்‌ வீட்டு மின்‌ நுகர்வோர்களுக்கு (75.30 சதவீதம்‌) மாதம்‌ ஒன்றிற்கு ரூ.72.50மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    7.. இரு மாதங்களுக்கு மொத்தம்‌ 400 யூனிட்டுகள்‌ வரை மின்‌ நுகர்வு செய்யும்‌ 18.82 லட்சம்‌ வீட்டு மின்‌ நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்‌) மாதம்‌ ஒன்றிற்கு ரூ.147.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    8. இரு மாதங்களுக்கு மொத்தம்‌ 500 யூனிட்டுகள்‌ வரை மின்‌ நுகர்வு செய்யும்‌ 70.56 இலட்சம்‌ வீட்டு மின்‌ நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்‌) மாதம்‌ ஒன்றிற்கு ரூ.297.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    9. இரு மாதங்களுக்கு மொத்தம்‌ 600 யூனிட்டுகள்‌ வரை மின்‌ நுகர்வு செய்யும்‌ 3.74 இலட்சம்‌ வீட்டு மின்‌ நுகர்வோர்களுக்கு (7.32 சதவீதம்‌) மாதம்‌ ஒன்றிற்கு ரூ.55 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    10. இரு மாதங்களுக்கு மொத்தம்‌ 700 யூனிட்டுகள்‌ வரை மின்‌ நுகர்வு செய்யும்‌ 1.96 இலட்சம்‌ வீட்டுமின்‌ நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்‌) மாதம்‌ ஒன்றிற்கு ரூ.275 மட்டும்‌ உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    11. இரு மாதங்களுக்கு மொத்தம்‌ 800 யூனிட்டுகள்‌ வரை மின்‌ நுகர்வு செய்யும்‌ 1.26 இலட்சம்‌ வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்‌) மாதம்‌ ஒன்றிற்கு ரூ.395 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    12. இரு மாதங்களுக்கு மொத்தம்‌ 900 யூனிட்டுகள்‌ வரை மின்‌ நுகர்வு செய்யும்‌ 0.84 இலட்சம்‌ வீட்டு மின்‌ நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்‌) மாதம்‌ ஒன்றிற்கு ரூ.565 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    13. வீட்டு மின்‌ உபயோகம்‌

    தற்பொழுது, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும்‌ மின்சாரத்தில்‌ 500 யூனிட்டுகள்‌ வரை பயன்படுத்தும்‌ நுகர்வோர்களுக்கு மின்‌ கட்டணமாக மொத்தம்‌ ரூ.7,730 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால்‌, மின்‌ நுகர்வு 500 யூனிட்டிலிருநீது, 501 யூனிட்டுகளாக அதிகரிக்கும்‌ பொழுது அதற்கான மின்‌ கட்டணத்‌ தொகையானது 58.10 % அதிகரித்து மொத்தம்‌ 1,786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல்‌, ஒரு யூனிட்‌ கூடுதலாக பயன்படுத்தினாலும்‌ மின்‌ நுகர்வோர்‌ கூடுதலாக ரூ.656.60 செலுத்தி வருகின்றனர்‌. இந்த வேறுபாடுகள்‌ முற்றிலும்‌ களையப்பட்டு ஓரே மின்‌ கட்டணமாக மாற்றி அமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    14. ஊரகம்‌ மற்றும்‌ கிராமப்புற பகுதிகளில்‌ இயங்கி வரும்‌ நூலகங்களுக்கான மின்‌ கட்டணம்‌, தற்பொழுது ஊரகம்‌ மற்றும்‌ கிராமப்புற பகுதிகளில்‌ இயங்கி வரும்‌ நூலகங்களுக்கான மின்‌ கட்டணம்‌ யூனிட்‌ ஒன்றிற்கு ரூ.5.75 ஆகவும்‌, நிலைக்‌ கட்டணமாக மாதம்‌ ஒன்றிற்கு ரூ.60 ஆகவும்‌ கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம்‌ படிக்கும்‌ திறனை மேம்படுத்தும்‌ விதமாக வணிக ரீதியில்‌ இயங்காத நூலகங்களுக்கான மின்‌ கட்டணத்தினை மானியம்‌ இல்லா வீட்டு விகிதப்பட்டியலில்‌ கணக்கீடு அதாவது 30% குறைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    15. பிற தாழ்வழுத்த மின்‌ கட்டணம்‌

    93% (2.26 இலட்சம்‌) சிறு மற்றும்‌ குறுந்தொழில்‌ மின்‌ நுகர்வோர்களுக்கு, குறைந்த அளவாக யூனிட்‌ ஒன்றிற்கு 50 காசுகள்‌ மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    16. 58% (79.28 இலட்சம்‌) வணிக மின்‌ நுகர்வோர்களுக்கு மாதம்‌ ரூ.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    17. தனியார்‌ கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்‌ ஒன்றிற்கு சிறிய தொகையாக ரூ.1 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    18. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட்‌ வரை இலவச மின்சாரம்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌. அதற்கு மேல்‌, யூனிட்‌ ஒன்றிற்கு 70 பைசா மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    19. கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு, தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு (LT), குறைந்த அளவில்‌, யூனிட்‌ ஒன்றிற்கு ரூ.../5 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: TNEB

    அடுத்த செய்தி