Home /News /tamil-nadu /

13 மாநிலங்கள் மின்சார வர்த்தகத்தில் ஈடுபட தடை.. தமிழகத்தில் மின்விநியோகம் பாதிக்கப்படாது - மின்சார வாரியம் விளக்கம்

13 மாநிலங்கள் மின்சார வர்த்தகத்தில் ஈடுபட தடை.. தமிழகத்தில் மின்விநியோகம் பாதிக்கப்படாது - மின்சார வாரியம் விளக்கம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Electricity : மின்சாரம் வாங்க மத்திய அரசு தடை விதித்தபோதும் எந்த பாதிப்பும் ஏற்படாது என தமிழ்நாடு மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் இன்று முதல் மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ மத்திய அரசு தடை விதித்த நிலையில், தமிழ்நாடுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தமிழக மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.

    தமிழ்நாட்டின் மின்சார தேவையில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் தமிழக அரசு உற்பத்தி செய்து வருகிறது. இதன் காரணமாக வெளி சந்தையில் இருந்து தமிழகத்திற்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம், மாநிலங்களில் உள்ள டிஸ்காம்ஸ் எனப்படும் மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் டிஸ்காம்ஸ் சார்பில் மின்சார உற்பத்தி நிறுவனங்கங்களுக்கு பணம் வழங்க வேண்டும்.ஆனால் தற்போது பல மாநிலங்களில் உள்ள டிஸ்காம்ஸ் சார்பில் மின்சாரத்துக்கு பணம் செலுத்தாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. 5,083  கோடி ரூபாய் நிலுவை தொகையை செலுத்தாததால், தமிழகம், தெலுங்கானா, பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Also Read: டோலோ-650 மாத்திரைகளை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி வரை ‘கவனிப்பு’: உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்

    இதன் காரணமாக தமிழகத்தில் மின் தடை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அச்சம் நிலவியது. இந்த நிலையில், மின்சாரம் வாங்க மத்திய அரசு தடை விதித்தபோதும் எந்த பாதிப்பும் ஏற்படாது என தமிழ்நாடு மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழ்நாடு சார்பில் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 926 கோடி ரூபாயில் 700 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுவிட்டதாகவும்,தமிழக அரசு செலுத்த வேண்டிய நிலுவை தொகை 226 கோடி ரூபாய் மட்டும் தான் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மின் தேவைக்கு ஏற்பத்தான் மின்சாரம் வாங்கப்படுவதாகவும், அக்டோபர் வரை மின் தேவை பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை என்றும் தமிழ்நாடு மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Electricity, Electricity bill, Tamilnadu

    அடுத்த செய்தி