பாஜகவுக்கும் அதன் அணிக்கும் மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர் - திருமாவளவன்

பாஜகவுக்கும் அதன் அணிக்கும் மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர் - திருமாவளவன்

விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

அசாம்,புதுவை தவிர 3 மாநிலங்களில் பாஜகவுக்கும் அதன் அணிக்கும் எதிராக மக்கள் மரணஅடி கொடுத்திருப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அசாமில் 3 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் உட்சபட்சமாக 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

    இந்நிலையில், மே.2ம் தேதியான இன்று 5 மாநிலங்களிலும் விறுவிறுப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் மீண்டும் அக்கட்சி ஆட்சியில் அமர உள்ளது. அதேபோல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.

    அசாமில் ஏற்கெனவே ஆட்சியிலிருந்த பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள உள்ளது. புதுச்சேரியைப் பொறுத்தவரையில் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



    விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், “அசாம்,புதுவை தவிர மே.வங்கம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாஜக'வுக்கும் அதன் அணிக்கும் எதிராக மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்.

    தமிழ்நாடு வேலன், மே.வங்கம் காளி, கேரளா அய்யப்பன் ஆகியோரின் தீர்ப்புக்கு- படுதோல்விக்குப் பொறுப்பேற்று மோடி, அமித்ஷா ஆகியோர் உடனே பதவி_விலக வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Sheik Hanifah
    First published: