Tamil Nadu Election Results 2021 Live Updates : தாராபுரம் தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலை
Tamil Nadu Election Results 2021 Live Updates : தாராபுரம் தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலை
எல்.முருகன்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்
சட்டமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக கூட்டணி தற்போது வரை 24 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 12 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
தாராபுரத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் கயல்விழி பின்னடைவை சந்தித்துள்ளார்.
கூடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் காசிலிலங்கம் முன்னிலையிலும் அதிமுக வேட்பாளர் ஜெயசீலன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
உதகை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் முன்னிலையிலும் பாஜக வேட்பாளர் போஜராஜன் பின்னடைவையும் சந்தித்துள்ளனர்.ஷ
மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி முன்னிலையிலும் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பின்னடைவையும் சந்தித்துள்ளனர்.
ஆரணியில் அதிமுக வேட்பாளர் சேவூர ராமசந்திரன் முன்னிலையில் உள்ளார்.
கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் உள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.