Tamil Nadu Election Result 2021: பாமக முன்னிலை பெறும் தொகுதிகள்!

Tamil Nadu Election Result 2021: பாமக முன்னிலை பெறும் தொகுதிகள்!

ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ்

வாக்கு எண்ணப்படும் நிலையில் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது.

  • Share this:
    தமிழக சட்டமன்ற வாக்கு எண்ணிக்கையில் 2 தொகுதியில் பாமக முன்னிலை பெற்றுள்ளது.

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் இருபெரும் திராவிட கட்சிகளான அதிமுக - பாஜக - பாமக ஒரு கூட்டணியாகவும், திமுக - காங்கிரஸ் - விசிக - கம்யூனிஸ்ட்டுகள் மற்றொரு கூட்டணியாகவும் களம் கண்டன. தவிர அமமுக, மநீம, நாதக ஆகியவைகளும் தேர்தலில் போட்டியிட்டன.

    இதையடுத்து, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்குகள் எண்ணப்படும் என்பதால், முழுமையான முடிவுகள் வெளியாக நள்ளிரவு ஆகலாம் என்று கூறப்படுகிறது. வாக்கு எண்ணப்படும் நிலையில் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது.

    இந்நிலையில், சேலம் மேற்கு தொகுதியில் இரண்டு சுற்று முடிவுகளின்படி பாமக வேட்பாளர் அருள், 567 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், அதிமுக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்த ஜி.கே.மணி 1194 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: