Tamil Nadu Election Result 2021: கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலை!

Tamil Nadu Election Result 2021: கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலை!

மு.க.ஸ்டாலின்

கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் அங்கு போட்டியிட்ட ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

  • Share this:
    சென்னை, கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான மு.க.ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார்.

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் இருபெரும் திராவிட கட்சிகளான அதிமுக - பாஜக - பாமக ஒரு கூட்டணியாகவும், திமுக - காங்கிரஸ் - விசிக - கம்யூனிஸ்ட்டுகள் மற்றொரு கூட்டணியாகவும் களம் கண்டன. தவிர அமமுக, மநீம, நாதக ஆகியவைகளும் தேர்தலில் போட்டியிட்டன.

    இதையடுத்து, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்குகள் எண்ணப்படும் என்பதால், முழுமையான முடிவுகள் வெளியாக நள்ளிரவு ஆகலாம் என்று கூறப்படுகிறது. வாக்கு எண்ணப்படும் நிலையில் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது.

    இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான மு.க.ஸ்டாலின் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் அங்கு போட்டியிட்ட ஸ்டாலின் வெற்றி பெற்றார். இதையடுத்து தற்போது கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக களம் கண்டிருக்கிறார். முக்கிய முதல்வர் வேட்பாளரான மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் முதன்மையான நட்சத்திர தொகுதியாக கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: