முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை

தமிழக அரசு தலைமைச் செயலகம்

தமிழக அரசு தலைமைச் செயலகம்

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அங்கரீக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்வைத்துள்ளனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான தி.மு.க சார்பாக ஆர்.எஸ். பாரதி,  என்.ஆர்.இளங்கோவன், அ.தி.மு.கவைச் சேர்ந்த துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன், மனோஜ்பாண்டியன் மற்றும் காங்கிரஸ், தே.மு.தி.க, பா.ஜ.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 9 கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, வாக்காளர் பட்டியல் நேர்மையாகவும் நியாயமாக முறையில் வெளியிடப்பட வேண்டும் என்றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரியில் 40 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டது. அதேபோல் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நடைபெற கூடாது என்றும் வலியுறுத்தியாதாக தெரிவித்தார். 80 வயதுக்கு மேல் இருப்பவர்கள் தபால் ஓட்டு போடுவது குறித்தும் தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியதாகவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

இதே போல அ.தி.மு.க சார்பாக பங்கேற்ற துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன், கொரோனா காரணாமாக வீடு மாறியவர்களுக்கு முகவரி மாற்றம் செய்து புதிய வாக்காளர் அடையாள அட்டையை விரைவில் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அ.தி.மு.க சார்பில் வாக்களர்களின் வசதிக்காக வாக்குசாவடி மையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

Also read... மருத்துவக் கலந்தாய்வுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தே.மு.தி.க துணைச் செயலாளர் பார்த்தசாரதி, 18 வயது நிறைவடைந்தவர்கள் வரும் தேர்தலிலேயே வாக்களிக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையை விரைவில் வழங்க வேண்டும் என்றார்.

நவம்பர் 16-ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அங்கீகரிக்கட்ட அரசியல் கட்சி பிரதிநிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார். கூட்டதில் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்ப்பது நீக்குவது தொடர்பாக சிறப்பு முகாம் நடத்துவது குறித்து அறிவிப்பை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு விரைவில்  வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Election Commission, Voter List