Home /News /tamil-nadu /

மேற்குவங்கத்தை போல நெருக்கடியான சூழல் தமிழகத்தில் இல்லை.. வானதி சீனிவாசன்!

மேற்குவங்கத்தை போல நெருக்கடியான சூழல் தமிழகத்தில் இல்லை.. வானதி சீனிவாசன்!

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

மேற்கு வங்க மாநில ஆளுநர் ஒரு முடிவை எடுத்திருக்கிறார், அதன் அடிப்படையில் தமிழக எதிர்கட்சி தலைவர் ஒரு கருத்தை சொல்லி இருக்கின்றார்.

மேற்குவங்கத்தை போல நெருக்கடியான சூழல் தமிழகத்தில் இருக்கின்றதாக நான் நினைக்கவில்லை என பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி , மேற்குவங்க சட்டமன்றம் முடக்கப்பட்டதை போல தமிழக சட்டமன்றமும் முடக்கப்படும் என சேலத்தில் பிரச்சாரத்தின் போது  தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக கோவையில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, சட்டத்தின் ஆட்சியை தேர்வு செய்யப்பட்ட அரசு எப்படி ஆட்சியை நடத்துகின்றது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் எனவும், மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவரத்துவங்கியது முதல் உள்ளாட்சி தேர்தல் வரை சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருந்தது என தெரிவித்தார்.

இதையும் படிங்க - ஆன்லைன் மூலம் கடன் பெற்றுத் தருவதாக கூறி சக ஊழியர்களிடம் பண மோசடி.. கரூர் வாலிபர் கைது!

ஆளும்கட்சியை தவிர அங்கு பிறகட்சியினர் தாக்கப்படுவும், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் ஏற்காத நிலையும் அங்கு இருந்தது எனவும், அதை நேரடியாக மேற்கு வங்கத்தில் நானே பார்த்து இருக்கிறேன் என தெரிவித்தார். அந்த மாநில மகளிரணியினருடன் ஆளுநரை சந்தித்து  மனு கொடுத்து இருக்கின்றேன் என தெரிவித்த அவர், மேற்கு வங்க மாநில ஆளுநர் ஒரு முடிவை எடுத்திருக்கிறார், அதன் அடிப்படையில் தமிழக எதிர்கட்சி தலைவர் ஒரு கருத்தை சொல்லி இருக்கின்றார்.

முதல்வரின் கருத்து தொடர்பாக நாங்கள் (பா.ஜ.க) எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். மேற்குவங்கத்தை போல நெருக்கடியான சூழல் தமிழகத்தில் இருக்கின்றதாக நான் நினைக்கவில்லை எனக்கூறிய அவர், எடப்பாடி பழனிச்சாமி கருத்தை கருத்தாக பார்க்க வேண்டும்.

இதில் பா.ஜ.க நிலைப்பாடு என்று எதுவும் இப்போதைக்கு  இல்லை, இதில் மாநில தலைமை ஏதேனும் கருத்து சொல்லாம் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
Published by:Esakki Raja
First published:

Tags: BJP, DMK, Vanathi srinivasan

அடுத்த செய்தி