தமிழ்நாட்டில் தீர்ந்து போன கையிருப்பு; மத்திய அரசு கொடுத்தால் மட்டுமே இனி தடுப்பூசி!

தடுப்பூசி

ஜூன் 1ம் தேதி 4.95 லட்சம் டோஸ் மற்றும் ஜூன் 5ம் தேதி 50 ஆயிரம் டோஸ் மட்டுமே இதுவரை வந்துள்ளன.

 • Share this:
  தமிழ்நாட்டில் ஒரு நாளுக்கு தேவையான தடுப்பூசி கையிருப்பு கூட இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 7.48 லட்சம் தடுப்பூசியும், 15ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலான காலத்துக்கு 18.36 லட்சம் என மொத்தம் 25.84 லட்சம் டோஸ் தடுப்பூசி கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

  மேலும் 18 வயது முதல் 44 வயது பிரிவினருக்கு செலுத்த ஜூன் மாதத்தில் 16.83 லட்சம் டோஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனவே மொத்தம் ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டுக்கு 42.67 லட்சம் டோஸ் தடுப்பூசி கிடைக்க வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதில் ஜூன் 1ம் தேதி 4.95 லட்சம் டோஸ் மற்றும் ஜூன் 5ம் தேதி 50 ஆயிரம் டோஸ் மட்டுமே இதுவரை வந்துள்ளன. தமிழகத்தில் நேற்று ( ஜூன் 5) வரை 96 லட்சத்து 74 ஆயிரத்து 470 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

  தடுப்பூசி கையிருப்பு இருந்த நாட்களில் சராசரியாக ஒரு நாளுக்கு 2 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். ஞாயிற்றுகிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் எண்ணிக்கை பொதுவாக குறைவாக இருக்கும். எனவே தற்போதைய இருப்பு நாளை காலை வரை மட்டுமே நீடிக்கலாம் என தெரிகிறது.

  அதன் பிறகு வருபவர்களுக்கு தடுப்பூசி இருக்காது. மத்திய அரசு அடுத்த தவணை தடுப்பூசி கொடுத்தால் மட்டுமே தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: