• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இந்த மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் தேவை... பேரிடர் மேலாண்மை ஆணையம் அழைப்பு

இந்த மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் தேவை... பேரிடர் மேலாண்மை ஆணையம் அழைப்பு

பேரிடர் மேலாண்மை ஆணைய அழைப்பு

பேரிடர் மேலாண்மை ஆணைய அழைப்பு

பேரிடர் மேலாண்மையில் தன்னார்வலர்களாக இணைந்து கொள்வதற்கு தமிழ்நாடு அரசு அழைப்புவிடுத்துள்ளது.

  • Share this:
    வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரையில் இருக்கும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. எனவே, வடகிழக்குப் பருவ மழை தீவிரமாக பெய்யும் நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படலாம். புயல் பாதிப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தநிலையில், சென்னை சேப்பாக்கம் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர், ‘வடகிழக்கு பருவமழை டிசம்பர் இறுதிவரை எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழையால் மனிதனுக்கு மட்டுமல்ல கால்நடைகளுக்கும் உயிரிழப்பு ஏற்பட கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். வானிலை அறிக்கையை தெரிந்துகொண்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளோம். கடந்த காலங்களில் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். மீனவர்கள் பாதுகாப்பிற்காக கடலோர காவல்படை தயாராக உள்ளனர் என அமைச்சர் கூறினார்.

    மாநில பேரிடர் மீட்பு படையினர், ஆயிரம் பேரும், தன்னார்வலர்கள் ஒரு லட்சம் பேரும் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளன, நீர்நிலைகள் மற்றும் நீர்தேக்கங்கள் கண்கானிப்புக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 121 பாதுகாப்பு மையங்கள், 5,106 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன’ என்று தெரிவித்தார்.

    இந்தநிலையில், பேரிடர் மேலாண்மையில் தன்னார்வலராக ஈடுபடுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்புவிடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பேரிடர் மேலாண்மையில் தன்னார்வலராக ஈடுபடுத்திக் கொள்ள கீழே இருக்கின்ற மாவட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.

    கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் என்று 16 மாவட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி மற்றும் உணவு, தங்குமிடம் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் தகவல்களைப் பெற 88385-60219 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: