ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல்.. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாண்டஸ் புயல்.. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

பள்ளி கல்லூரிகள் விடுமுறை

பள்ளி கல்லூரிகள் விடுமுறை

mandous cyclone : கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்க கடலில் உருவாக உள்ள மாண்டஸ் புயல் (Cyclone Mandous) தமிழத்தில் இன்று முதல் பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னத்தால் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

First published:

Tags: Cyclone Mandous, School Leave, Weather News in Tamil