தமிழகத்தில் எத்தனை சதவீத முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்?

கோப்புப் படம்

தமிழ்நாட்டில் முன்களப் பணியாளர்கள் 44 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

  • Share this:
தமிழகத்தில் சுகாதாரம், காவல்துறை, வருவாய் துறை, துப்புரவு என முன் களப்பணியாளர்கள் மொத்தம் 15,43,241 பேர் உள்ளனர். இவர்களில் 6,90,488 பேர் அதாவது 44% மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஜனவரி 16 ஆம் தேதி கொரானா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய நாள் முதலே முன் களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படுகிறது. 7 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் முன் களப் பணியாளர்கள் 100% இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
தமிழகத்தில் 15,43,241 சுகாதார பணியாளர்கள் உள்ளனர். இதில் 5,65,718 பேர் சுகாதாரப் பணியாளர்கள் ஆவர். சுகாதார பணியாளர்களில் 3,27,164 பேர் அதாவது 58% பேர் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

மேலும் 2,09,919  பேர் ( 37%) ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் செலுத்திக் கொண்டுள்ளனர். அதே போன்று மாநிலத்தில் காவல்துறை, வருவாய் துறை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் என பிற துறைகளைச் சேர்ந்த முன் களப்பணியாளர்கள் 9,78,023 பேர் உள்ளனர். இவர்களில் 3,63,324 பேர் அதாவது 37% மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி முடித்துள்ளனர். மேலும் 4,15,004 பேர் ஒரு டோஸ் மட்டும் போட்டுக் கொண்டுள்ளனர்.

முன்களப் பணியாளர்கள் - 15,43,241
இரண்டு டோஸ் செலுத்தியவர்கள் - 6,90,488 ( 44%)
ஒரு டோஸ் மட்டும் செலுத்தியவர்கள்- 8,52,753( 40.4%)
சுகாதார பணியாளர்கள் - 5,65,218
இரண்டு டோஸ் செலுத்தியவர்கள் - 3,27,164 (58%)
ஒரு டோஸ் மட்டும் செலுத்தியவர்கள் - 2,09,919 ( 37%)
காவல், வருவாய் உள்ளிட்ட துறையினர்
இரண்டு டோஸ் செலுத்தியவர்கள் - 3,63,324 ( 37%)
ஒரு டோஸ் மட்டும் செலுத்தியவர்கள் - 415004 ( 42%)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா தடுப்பு பணியில் முன் நின்று பணி செய்யும் முன்களப் பணியாளர்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொண்டு பொதுமக்களுக்கு முன் மாதிரியாக முன்களப் பணியாளர்கள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Published by:Karthick S
First published: