• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு: தமிழ்நாட்டில் எவை இயங்கும்? எவை இயங்காது?

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு: தமிழ்நாட்டில் எவை இயங்கும்? எவை இயங்காது?

ஊரங்கு கட்டுப்பாடுகள்

ஊரங்கு கட்டுப்பாடுகள்

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • Share this:
    தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலக் கட்டுப்படுத்தும் வகையில் அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்துவருகிறது. எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    அதன் அடிப்படையில், பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில், கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைபிடிக்குமாறும், மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி, மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தமிழ்நாட்டில் செயல்பட்ட அனுமதிக்கப்பட்டவை:

    • இன்று முதல் ஏற்கெனவே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

    • அனைதுத வழிபாட்டுத் தலங்களிலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    • அனைத்து தனிப்பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

    • கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு 1-11-2021-ம் முதல் முதல் அனுமதியளிக்கப்படுகிறது.

    • மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம்.

    • தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படலாம்.

    • மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள்(LKG, UKG), அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். காப்பாளர், சமையலர் உள்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

    • ஞாயிற்றுகிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி

    • திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்குபெற அனுமதி


    தமிழகத்தில் அனுமதிக்கப்படாத செயல்பாடுகள்:

    • திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: