தமிழகத்தில் 6,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு; 150 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்று

தமிழகத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 698 பேருக்கும், ஈரோட்டில் 597 பேருக்கும், சேலத்தில் 398 பேருக்கும், சென்னையில் 350 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,755 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தின் இன்றைய பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,68,406 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 5,755 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,55,332 ஆக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 8,132 கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிலுருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,75,963 ஆக உள்ளது.

    கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 150 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 32,051 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 698 பேருக்கும், ஈரோட்டில் 597 பேருக்கும், சேலத்தில் 398 பேருக்கும், சென்னையில் 350 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published: