தமிழகத்தில் 3,000க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று கோயம்புத்தூரில் 338 பேருக்கும், ஈரோட்டில் 215 பேருக்கும், சேலத்தில் 180 பேருக்கும், சென்னையில் 174 பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று கோயம்புத்தூரில் 338 பேருக்கும், ஈரோட்டில் 215 பேருக்கும், சேலத்தில் 180 பேருக்கும், சென்னையில் 174 பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,913 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

  தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலை பெரும் போராட்டத்திற்கு பின்னர் தற்போது படிப்படியாக கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த மாதங்களில் நாள் ஒன்றுக்கு 35,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 3,000க்கும் கீழ் குறைந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், இன்றைய பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று ஒரே நாளில் 1,50,412 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 2,913 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 25,16,011 ஆக அதிகரித்துள்ளது.

  கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 3,321 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 24,49,873 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 33,371 ஆக அதிகரித்துள்ளது.

  Also read: கொரோனாவால் பெற்றோரை இழந்த 197 குழந்தைகளுக்கு மட்டுமே இதுவரை நிதி வழங்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று கோயம்புத்தூரில் 338 பேருக்கும், ஈரோட்டில் 215 பேருக்கும், சேலத்தில் 180 பேருக்கும், சென்னையில் 174 பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  Published by:Esakki Raja
  First published: