• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,575 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த உயிரிழப்பு 35,000

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,575 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த உயிரிழப்பு 35,000

கொரோனா

கொரோனா

தமிழ்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 26,21,086 ஆக அதிகரித்துள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,575 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 1,60,694 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,575 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 26,21,086 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,610 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 25,69,771 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 35,000-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து தற்போது 16,315 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்று மட்டும் சென்னையில் 167 பேருக்கும், கோயம்புத்தூரில் 244 பேருக்கும், ஈரோட்டில் 109 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: