தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு - 293 பேர் உயிரிழப்பு

கோப்புப் படம்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30,355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 293 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கொரோனா இரண்டாவது அலை, யாரும் எதிர்பாராதவகையில் மிகப்பெரும் பாதிப்புகளை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழக சுகாதார கட்டமைப்பு திணறத் தொடங்கியுள்ளது.

  இந்தநிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் இன்று மட்டும் 1,56,356 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 30,355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் தமிழகத்தின் மொத்த பாதிப்பு 14,68,864ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 19,508 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

  இதுவரையில், 12,79,658 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 293 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 16,471 பேராக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 7,564 பேருக்கும், செங்கல்பட்டில் 2,670 பேருக்கும், கோயம்புத்தூரில் 2,636 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,076 பேருக்கும், மதுரையில், 1,172 பேருக்கும், திருவள்ளூரில் 1,344 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: