தமிழகத்தில் 21,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - 144 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் 21,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - 144 பேர் உயிரிழப்பு

மாதிரிப் படம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 144 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 3.5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தமிழகத்திலும் கொரோனா பரவல் கட்டுங்கடங்காமல் உள்ளது. அதனால், நாளை மறுநாள் முதல் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

  அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் நேற்று மட்டும் 1,40,512 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 21,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 12,49,292 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 19,112 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 11,09,450 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 144 பேர் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 14,612 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 6,228 பேருக்கும், செங்கல்பட்டில் 1,608 பேருக்கும், கோயம்புத்தூரில் 1,509 பேருக்கும், திருவள்ளூரில் 1,152 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: