தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு இன்று பதிவாகியுள்ளது.
இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று மட்டும் 22,757 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 34,64,131 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 567 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்து தற்போது 5,174 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. இன்று மட்டும் சென்னையில் 497 பேருக்கும், செங்கல்பட்டில் 190 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.